கமல் தயாரிப்பில் விஜய் படமா?

Filed under: சினிமா |

நடிகர் விஜய், கமலஹாசன் தயாரிப்பில் நடிக்கப் போவதாக அதிகாரப்பூர்மற்ற தகவல்கள் பரவி வருகிறது.

மற்ற நடிகர்களை வைத்து வரிசையாக நடிகர் கமல்ஹாசன் தற்போது திரைப்படங்களை தயாரித்து வருகிறார். விக்ரம், சிவகார்த்திகேயன் வரிசையில் சிம்பு மற்றும் விஜய் ஆகியோர் இணையப் போவதாக கூறப்படுகிறது. கமலஹாசன் தயாரிக்கப் போவதாக கூறப்படும் திரைப்படம் பற்றி புதிய தகவல் வெளியாகியுள்ளது. அப்படத்தை இயக்குனர் கௌதம் மேனன் இயக்குவார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே இவர் விஜய்யை வைத்து “யோகன் அத்தியாயம் ஒன்று” திரைப்படத்தை அறிவித்து அந்த படம் கிடப்பில் போடப்பட்டது. அதையடுத்து பல ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.