இளைஞர்கள் இவரை போல் இருக்க வேண்டும்; சிவகார்த்திகேயனை பாராட்டிய நெல்லை துணை கமிஷனர்!

Filed under: சினிமா |

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் நல்ல வளர்ச்சி அடைந்தார். இவருடைய படங்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும். கார்த்திகேயன் நடிக்கும் படத்தில் முக்கியமாக புகை பிடிக்கும் மற்றும் மது அருந்தும் காட்சிகள் பெரும் அளவில் நடித்ததில்லை என்பது காரணமாக உள்ளது.

இந்நிலையில் படங்கள் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் அவர் புகைப்பிடிப்பது மற்றும் குடிப்பழக்கம் இல்லை என ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியது: நான் இதுவரை சிகரெட் பிடித்தது இல்லை லிக்கர் குடித்தது இல்லை. அதற்கு என்னுடைய நண்பர்கள் தான் காரணம். என்னுடைய நண்பர்கள் யாரும் என்னை சிகரெட் பிடிக்கவும் மற்றும் லிக்கர் குடிக்கவும் கட்டாயப்படுத்தவில்லை என தெரிவித்தார். பின்னர் உங்களுடைய அப்பா அம்மா சம்பாதிக்கும் பணத்தை இந்த மாதிரி செலவு செய்து உங்களுடைய உடம்பை நீங்களே கெடுத்துக் கொள்ள வேண்டாம் என சிவகார்த்திகேயன் தெரிவித்திருந்தார்.

சிவகார்த்திகேயன் பேசிய வீடியோவை நெல்லை துணை கமிஷனர் அர்ஜுன் சரவணன் அவருடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியது: நட்சத்திரங்கள் சொல்வதை அப்படியே கேட்பவர்கள் என்றால் இதனையும் கொஞ்சம் கேளுங்க . குடிக்க , புகைக்க எந்த நண்பனும் அழைக்க மாட்டான், அப்படி அழைப்பவர் நட்பிலிருந்து வெளியேறுங்கள். அவன் உங்களை உலகிலிருந்து வெளியேற அழைக்கிறான் என பதிவிட்டுள்ளார்.