கமல் மணிரத்னம் படத்தின் கதாநாயகி?

Filed under: சினிமா |

“பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் இரண்டு பாகங்களும் மணிரத்னம் இயக்கத்தில் வெளியானதில் முதல் பாகம் அளவுக்கு இரண்டாம் பாகம் பெரிதாக வசூல் செய்யவில்லை.

கமல்ஹாசன் நடிக்கும் திரைப்படத்தை மணிரத்னம் இயக்கவுள்ளார். “நாயகன்” திரைப்படத்துக்குப் பிறகு 35 ஆண்டுகள் கழித்து இருவரும் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றுகிறார்கள். படத்தில் நடிகர் சிம்பு ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தின் கதாநாயகியாக நடிக்க திரிஷா ஒப்பந்தமாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் திரிஷா நடித்து அவருக்கு பாரட்டுகள் குவிந்தது. இப்போது அடுத்தடுத்து அவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.