இந்த சின்ன விஷயத்தால் நடிகர் அஜித்துக்கு தேசிய விருது கிடைக்க வில்லையா!

Filed under: சினிமா |

இந்த சின்ன காரணத்தினால் தல அஜித் தேசிய விருதை பெறமுடியாமல் போய்விட்டதா, என்ன காரணம் தெரியுமா?

நடிகர் அஜித் குமார் தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருப்பவர். இவரை ரசிகர்கள் தல அஜித் என்று செல்லமாக அழைப்பார்கள். கடந்த ஆண்டு இவருடைய படங்களான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை பெரும் வெற்றியை பெற்றது.

தற்போது இயக்குனர் ஹச். வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணத்தினால் படப்பிடிப்பில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2000 ஆம் ஆண்டு நடிகர் அஜித், ஜோதிகா நடித்த முகவரி படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த படத்தை V. Z. துரை இயக்கினார். இந்த படம் வெற்றி பெற்றதால் நடிகர் அஜித் இவருக்கு ஒரு காரை பரிசாக கொடுத்துள்ளார்.

மேலும், இந்த படம் தேசிய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு பின்னால் ஒரு வாக்கு வித்தியாசத்தில் நடிகர் அஜித்துக்கு தேசிய விருது கிடைக்காமல் போய்விட்டது.