கர்நாடகாவில் ஆட்சியை பிடிப்பது யார்?

Filed under: அரசியல்,இந்தியா |

மே 10ம் தேதி கர்நாடக மாநிலத்தில் தேர்தல் நடைபெறும். மே 13ம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்று இன்று காலை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க சுறுசுறுப்பாகி உள்ளன.

கர்நாடக மாநிலத்தில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டதில் எந்த கட்சி ஆட்சிக்கு வரும் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தற்போதைய ஆளும் கட்சியான பாஜகவை 33 சதவீதம் பேர் பிடிக்கவில்லை என வாக்களித்துள்ளனர். அதேபோல் காங்கிரஸ் கட்சியையும் 30 சதவீதம் பேர் பிடிக்கவில்லை எனக் கூறியிருப்பது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் பெருவாரியான மக்கள் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவதையே விரும்புவதாகவும் காங்கிரஸ் கட்சிக்கு இரண்டாம் இடம் தான் கிடைக்கும் என்று கூறியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இக்கருத்துக்கணிப்பின்படி தேர்தல் முடிவுகள் இருக்குமா அல்லது மாற்றம் இருக்குமா என்பதை தேர்தலின் முடிவிற்கு பிறகுதான் தெரியும்.