கடந்த 2019ம் ஆண்டு சீனாவிலிருந்து உலக நாடுகளுக்கு கொரொனா தொற்றுநோய் பரவியது. இவ்வாண்டு ஓரளவு கொரொனா தாக்கம் குறைந்தது. ஆனால், தற்போது, மீண்டும் சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளில் பரவி வருகிறது.
கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சர் பசுவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு இவ்வாண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. சீனாவில் உருமாறிய கொரோனா வைரஸான பிஎப்-7 ஒமைக்கான் பரவலால் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் அண்டை நாடான இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் எழுதி, பொதுஇடங்களில் மக்கள் மாஸ்க் அணிய வேண்டும் என்று அதில் கூறியிருந்தார். இதை ஒவ்வொரு மாநில அரசுகளும் செயல்படுத்தி வருகிறது. கர்நாடக மாநிலத்தில் முககவசம் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநில முதலமைச்சர் பசுவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு இவ்வாண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.