கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி பாஜகவுடன் இணைந்து பணியாற்றுவோம் என தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் சமீபத்தில் எதிர்கட்சிகள் கூட்டம் நடந்தது. அக்கூட்டத்திற்கு குமாரசாமிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அதேபோல் டில்லியில் பாஜக கூட்டணி கூட்டம் நடந்தபோதும் அதிலும் குமாரசாமிக்கு அழைப்பு விடுக்கவில்லை. இரண்டு கூட்டணிகளும் தனக்கு அழைப்பு விடுக்கவில்லை என்பதை குமாரசாமி அதிருப்தியுடன் தெரிவித்திருந்தார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்றும் கர்நாடக மாநிலத்தின் நலன் கருதி பாஜகவுடன் இணைந்து பணியாற்றுவோம் என்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார். மேலும் கூட்டணி குறித்து முடிவெடுக்க தனது தந்தை தேவகவுடா தனக்கு முழு அதிகாரம் வழங்கி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.