வே. மாரீஸ்வரன்
கோவை : தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று, இரண்டாம் இடத்தில் உள்ளது கோவை மாவட்டம். மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் முழுவீச்சில் இரவு பகல் பாராமல் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த பொதுமக்களிடம் பல்வேறு விழிப்புணர்வுகளையும் நோய் தொற்று உள்ள இடங்களில் கிருமி நாசினி தெளித்து நோய்த் தொற்றைத் தடுத்து கொண்டு வருகின்றனர்.
வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வரும் இந்நேரத்தில் தி.மு.க. சொத்து பாதுகாப்பு குழு துணை தலைவரும் முன்னாள் அமைச்சருமான பொங்கலூர் நா. பழனிச்சாமி பாப்பம்பட்டி பிரிவில் தனக்கு சொந்தமான கலைஞர் கருணாநிதி பொறியியல் கல்லூரியை தற்போது நிலவும் சூழலில் கல்லூரி முழுவதையும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு சிகிச்சையளிக்க கொரோன்னா வார்டாக பயன்படுத்திக் கொள்ளுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணியிடம் கடந்த 31/ 3 /2020 /அன்று கடிதம் கொடுத்தார். கோவையில் எண்ணற்ற பெரிய பெரிய கல்லூரி நிறுவனங்களுக்கு மத்தியில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி தன்னிலம் கருதாமல் சேவை மனப்பான்மையோடு தனது கல்லூரியை கொரோனா வார்டாக பயன்படுத்தி கொள்ள மாவட்ட ஆட்சியரிடம் கடிதம் கொடுத்த விபரம் கோவையில் உள்ள மற்ற கல்லூரி நிறுவனங்களிடையே சிந்திக்க வைத்தது.
அதேநேரத்தில் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் தனது தொகுதிக்குட்பட்ட ஒண்டிபுதூர், சிங்காநல்லூர், சித்தாபுதூர், பீளமேடு, மற்றும் பல பகுதிகளில் உள்ள தூய்மை பணியாளர்களுக்கு முககவசம் ( மாஸ்க் ) மற்றும் அவர்களின் குடும்பத்திற்கு தேவையான அத்தியவசிய பொருட்கள் வழங்கியதுடன் தனது தொகுதியில் வறுமையில் வாடும் தாழ்த்தப்பட்ட தலித் மக்களுக்கு தேவையான அரிசி பருப்பு மற்றும் பொருட்களை வழங்கியதுடன் தனது தொகுதி மக்களிடம் கொரோன்னா வைரஸ் தொற்று விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.