சமீபத்தில் பெண்கள் கல்லூரியில் நுழைந்து ரகளையில் ஈடுபட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த மாதம் 30ம் தேதி மதுரையில் பெண்கள் கல்லூரியில் நுழைந்த சூர்யா, அருண், அருண் பாண்டியன், மதுநவீஸ் ஆகிய 4 பேர் உள்ளிட்ட 10 பேர் ரகளையில் ஈடுபட்டனர். இதை தட்டிக்கேட்ட மாணவிகளின் பெற்றோர்களும் தாக்கப்பட்டனர். இந்நிலையில் இச்சம்பவத்தில் 10 பேர் கைதான நிலையில் அவர்களில் சூர்யா, அருண், அருண் பாண்டியன், மதுநவீஸ் ஆகிய 4 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து இந்த நான்கு பேர்களும் சில மாதங்களுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Related posts:
திண்டுக்கல் தரகு மண்டி வர்த்தக சங்க வணிக வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தரையில் அமர்ந்து த...
டிஆர் பாலுவின் மகள் பாஜகவில் இணைகிறாரா?
தேனியில் தமிழக வெற்றி கழகம் நடத்தும் நலத்திட்ட விழா. உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்.
விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ. ப மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்ற நிலையில் காலமானார்.



