இனிமேல் ஆறுகளை மாசு படுத்துவோர் மீது குண்டர் சட்டம் பாயும்…

Filed under: தமிழகம் |

ஆறுகளை மாசு படுத்துபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் வகையில் ஏன் சட்டத்திருத்தத்தை கொண்டுவரக்கூடாது என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வியை எழுப்பியது.

கரூர் ,திருப்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள சாயப்பட்டறை நிறுவனங்கள் தங்களது நிறுவனங்கள் மூலம் வரும் கழிவுகளை ஆற்றுக்குள் கலப்பதாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், கரூர் மாவட்டத்தில் எத்தனை பட்டறைகள், ஆலைகள், தொழிலகங்கள் உள்ளன..எத்தனை நிறுவனங்களின் கழிவு நீர் அமராவதி ஆற்றில் கலக்கிறது என்றும் கழிவு நீரை சுத்திகரிக்க சுத்திகரிப்பு நிலையம் உள்ளதா எந்தும் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் எவ்வளவு தண்ணீர் கொடுக்கப்படுகிறது என்றும் எவ்வளவு கழிவு நீர் வெளியேற்றப்படுகிறது என்பது குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம், கரூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தவிட்டுள்ளது.

இதனால் ஆறுகளை மாசு படுத்துவோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுத்தால்தான் ஆறுகளைப் பாதுகாக்க இயலும் எனவும் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.