இன்றைய இளைய தலைமுறையினர் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடும் உணவாக மாறியுள்ளது பீட்சா. பீட்சாவிற்கான உணவுப் பொருட்களை கழிவறைக்கு அருகில் வைத்திருந்ததாக ஹோட்டல் நிர்வாகம் மீது கண்டனம் குவிந்துள்ளது.
ஐடி நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள், இளைஞர்கள், குழந்தைகள், சிறுவர்களின் விருப்ப உணவாக மாறியுள்ளது பீட்சா. இந்தப் பீட்சாவுக்கு என பிரத்யேக நிறுவனங்கள், ஹோட்டல்களில் மக்கள் குவிகின்றனர். இந்தக் கொரோனா காலத்தில், இது ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டு, சோமோட்டா, ஓலா, ஓபர் உட்பட நிறுவனங்கள் மூலம் விற்கப்படுகிறது. பெங்களூரில் டாமினோஸ் உணவகத்தில் பீட்சா மாவு வைக்கப்பட்டிருந்த இடத்தில், கழிவறையில் சுத்தம் செய்யப்படும் பொருட்கள் மாப், பிரஸ் உள்ளிட்ட பொருட்கள் இருக்கும் புகைப்படம் வைராலாகி வருகிறது. சாப்பிடும் உணவுப் பொருட்கள் அருகில் கழிவறைப் பொருட்கள் வைத்திருந்த ஹோட்டல் நிர்வாகம் மீது கண்டனம் குவிந்துள்ளது.