இயக்குனர் சற்குணம் மீது நடிகர் சங்கத்திடம் புகார் மனு ஒன்றினை அளித்துள்ளார் நஸ்ரியா. வாகை சூடவா புகழ் சற்குணம் இயக்கத்தில் தனுஷ், நஸ்ரியா நடித்துள்ள திரைப்படம் நய்யாண்டி. இப்படம் வருகின்ற 11ம் திகதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இயக்குனர் சற்குணம் தன் அனுமதி இல்லாமலேயே சில காட்சிகளில் தன்னை கவர்ச்சியாக படம்பிடித்திருப்பதாகவும் இது ஒப்பந்த விதிகளுக்கு முரணானது எனவும் நடிகர் சங்கத்தில் புகார் அளித்திருக்கிறார் நஸ்ரியா. மேலும் படத்தின் ஒரு காட்சியில் கொஞ்சம் கவர்ச்சியாக நடிக்குமாறு தன்னை இயக்குனர் சற்குணம் கேட்டதாகவும், அதற்கு அப்போதே தனக்கு விருப்பம் இல்லை என கூறிவிட்டதாகவும் சொல்கிறார். இதனை தனது பேஸ்புக்கிலும் அப்டேட் செய்திருக்கிறார்.