நாளை தமிழக கவர்னர் ரவி டில்லி பயணம் செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சமீபத்தில் தமிழக சட்டசபை கூடிய போது ஆளுநர் உரையின்போது எம்எல்ஏக்கள் கூச்சல் குழப்பம் விளைவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இதனை சபாநாயகர் அப்பாவு கண்டிக்காமல் அமைதியாக இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆளுநர் அவையில் இருக்கும்போதே அவருக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்ததை அடுத்து ஆளுநர் அவையிலிருந்து வெளியேறினார். இச்சம்பவம் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் நாளை டில்லிக்கு கவர்னர் ரவி செல்லப் போவதாகவும், அவர் டில்லியில் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை சந்திப்பார் என்று கூறப்படுகிறது. சட்டசபையில் நடந்த விவகாரம் குறித்து இன்று திமுக எம்பிக்கள் ஜனாதிபதியை சந்தித்துள்ள நிலையில் நாளை கவர்னர் டில்லி செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.