மகாத்மா காந்தியின் பிறந்த நாளுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை!

Filed under: இந்தியா |

இன்று மகாத்மா காந்தியின் 151 வது பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் டெல்லி ராஜ்காட்டில் இருக்கும் மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அஞ்சலி செலுத்தினார்.

மேலும், முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் 116வது பிறந்தநாளை முன்னிட்டு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த விஜய் கோட்டில் இருக்கும் சாஸ்திரியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

மகாத்மா காந்திக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்பு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பல கட்சித் தலைவர்களும் காந்தியடிகளுக்கு அஞ்சலி செலுத்தினார்.