காங்கிரசை சாடிய ஜே.பி.நட்டா!

Filed under: அரசியல்,இந்தியா |

பாஜக தலைவர் ஜே.பி.நட்டா காங்கிரஸ் கட்சி மக்களைப் பிரித்து வாக்கு வங்கி அரசியல் செய்தது என்று தெரிவித்துள்ளார்.

பாஜக தலைவர் ஜே.பி.நட்டா மத்தியப் பிரதேச மாநிலம் சித்தியில் தேர்தல் பிரச்சாரத்தில், “முன்பு காங்கிரஸ் கட்சி மக்களைப் பிரித்து வாக்கு வங்கி அரசியல் செய்தது. அனைவரிடம் இருந்தும் வாக்குகளை பெற்றுக் கொண்டு குறிப்பிட்ட சில சாதி, சமுதாயம் அல்லது பிரிவுகளுக்காக மட்டும் அரசாங்கத்தை அமைத்தது. காங்கிரஸ் கட்சி அனைவரையும் உள்ளடக்கிய அரசாக இருக்கவில்லை. ஆனால், தற்போது பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளில் இந்திய அரசியலின் வரையறையை மாற்றிவிட்டார். தற்போது மக்களை தவறாக வழிநடத்தி வாக்கு வங்கி அரசியல் செய்ய முடியாது. சாதி மற்றும் வகுப்புவாத அரசியலை இனி செய்ய முடியாது” என ஜே.பி.நட்டா கூறினார்.