வாழ்நாள் முழுவதும் வேலைக்கு சென்று பணம் சம்பாதிக்காமல் கையில் இருந்த காசு காலியானதும் ஒரு குடும்பம் தற்கொலை செய்து கொண்டுள்ளது.
மதுரை சேர்ந்த பாண்டியன் சுகாதாரத்துறை அதிகாரியாக வேலை செய்தார். இவருக்கு வாசுகி என்ற மனைவியும் உமாதேவி, கோதண்டபாணி ஆகிய குழந்தைகளும் இருந்தனர். பாண்டியன் தனது மனைவி வாசுகியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டார். கணவர் பிரிந்தவுடன் வாசுகி தனது மகள் மகனுடன் தனியே வசித்து வந்தார். கணவன் பிரிவால் கடும் மன உளைச்சலில் இருந்த வாசுகி மற்றும் மன உளைச்சலில் இருந்த உமாதேவி கோதண்டபாணி ஆகிய மூவரும் வேலைக்கு செல்லாமல் ஒரு பைசா கூட சம்பாதிக்காமல் இருந்தனர். வங்கியில் இருந்த இருப்பு, நகைகள் விற்று சில ஆண்டுகள் பொழுதை கழித்த நிலையில் பணம் முழுதும் காலியான நிலையில் மூவரும் தற்கொலை செய்து கொண்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.