“ஜப்பான்” திரைப்படத்தில் கார்த்தி நடிப்பில் ராஜு முருகன் இயக்கி முடித்துள்ளார். அடுத்து அவர் நலன் குமாரசாமி இயக்கத்தில் பெயரிடப்படாத ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இந்த படங்களில் முதலில் “ஜப்பான்” படமும், அடுத்ததாக நலன் குமாரசாமி இயக்கும் படமும் ரிலீசாகும் என கூப்படுகிறது.
இதில் நலன் குமாரசாமி இயக்கும் படத்தில் சில பேண்டசி அம்சங்களும் இடம்பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தில் எம்ஜிஆர் ரசிகராக கார்த்தி நடித்துள்ளதாகவும், அவருக்குள் எம் ஜி ஆர் வந்துவிடுவது போன்ற சில பேண்டசி அம்சங்களும் இடம்பெற்றுள்ளதாம். இதனால் எம் ஜி ஆரின் பிரபலமான சொற்களான “ரத்தத்தின் ரத்தமே” அல்லது “வா வாத்தியாரே” என்ற இரண்டில் ஒன்றை வைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. “ஜப்பான்” படத்தை முடித்துள்ளதால் இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.