உடல்நிலை சரியில்லாத தனது பாட்டியை போடி அருகே உள்ள நாகலாபுரம் கண்மணி என்பவர் பார்க்க வந்தார்.
அப்போது போடி காவல் நிலையம் முன்பு நடந்து சென்ற கொண்டிருந்த போது, இரண்டு சக்கர வாகனத்தில் வந்த மூன்று மர்ம நபர்கள், பெண்ணின் கையில் வைத்திருந்த செல்போன் மற்றும் பணத்தைப் பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் சென்று விட்டனர். இதுகுறித்து போடி காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீஸ் நிலையத்திற்கு முன்பு நடந்த இச்சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.