கிருத்திகா உதயநிதி ஜெயம் ரவி நடிக்கும் 33வது திரைப்படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இத்திரைப்படத்துக்கு பழைய ஹிட் படத்தின் டைட்டிலான ‘காதலிக்க நேரமில்லை’ என்ற தலைப்பை வைத்துள்ளனர்.
ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனன், யோகி பாபு, மனோ, லட்சுமி ராமகிருஷ்ணன், ஜான் கொக்கன், வினோதினி உட்பட பலரும் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். படத்தின் ஷூட்டிங் மொத்தமாக நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்னும் இரண்டு பாடல்கள் மட்டும் ஷூட் செய்யவேண்டி உள்ளதாகவும், அதை வரும் பிப்ரவரி மாதத்தில் ஷூட் செய்ய உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இப்படம் அடுத்தாண்டு ஜூலை மாதத்தில் ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது.