சென்னையிலிருந்து கிறிஸ்மஸ் பண்டிக்கையொட்டி, பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வருடாவருடம் தீபாவளி, பொங்கல் உட்பட பண்டிகையொட்டி சென்னை மாநகரிலிருந்து பல்வேறு மாவட்டங்களுக்குச் செல்வதற்காக சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டும். அதன்படி, இம்முறை கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி, சென்னையிலிருந்து பொதுமக்களின் வசதிக்காக 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. மேலும், வெள்ளிக்கிழமை 300 சிறப்புப் பேருந்துகளும், சனிக்கிழமை 300 சிறப்பு பேருந்துகளும் என மொத்தம் 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவித்துள்ளது.