திமுகவினர் கிளாம்பாக்கம் மக்களுக்கு அல்வா கொடுத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
திமுகவினர் மத்திய அரசு அளிக்கும் நிதி பகிர்வு மிகவும் குறைந்ததாக இருக்கிறது. தமிழகத்திலிருந்து அளிக்கும் வருமானத்தில் பெருமளவு மத்திய அரசு எடுத்துக் கொண்டு சிறிய அளவே நம் மாநிலத்திற்கு தந்து கொண்டிருக்கிறது. மத்திய அரசு மாநில அரசை வஞ்சிக்கிறது என்றும் கூறி வருகின்றனர். இது குறித்து சமீபத்தில் திமுக எம்பிக்கள் டி ஆர் பாலு, ஆ ராசா நாடாளுமன்றத்தில் பேசினர். மத்திய அரசு அளிக்கும் நிதி பகிர்வை உணர்த்தும் வகையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் திமுகவினர் அல்வா கொடுத்து மத்திய அரசு வஞ்சிப்பதை மக்களிடம் விளக்கி கூறியுள்ளனர். இதனால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.