புதுடெல்லி, செப் 24:
டெல்லி சென்றுள்ள தமிழக ஆளுநர் ரவி, குடியரசு தலைவர் மற்றும் குடியரசு துணை தலைவரையும் சந்தித்துப் பேசினார்.
தமிழக ஆளுநராக, ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரியும், நாகாலாந்து முன்னாள் ஆளுநருமான ஆர்.என். ரவி, சமீபத்தில் பதவி ஏற்றார். ஆளுநராக பொறுப்பேற்றபின், டில்லிக்கு சென்று ஜனாதிபதியை சந்திப்பது ஒரு மரபாகும்.
அதன்படி, தமிழக ஆளுநர், புதுடெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்றைய தினம், ராஷ்டிரபதி பவனில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை இவர் சந்தித்துப் பேசினார்.
இந்நிலையில், இன்று துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவை, தமிழக ஆளுநர் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும், இவர் சந்தித்துப் பேச உள்ளார். அந்த சந்திப்பில், மாநிலத்தில் நிலவும் அரசியல் சூழல் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.