அயோத்தி ராமர் கோவிலுக்கு அடிக்கல்: வரலாற்றில் புதிய சகாப்தம் ஆரம்பம் – அமித்ஷா பெருமிதம்!

Filed under: இந்தியா |

அயோத்தியில் இருக்கும் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டியதால் வரலாற்றில் புதிய சகாப்தம் ஆரம்பமாகிறது என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பெற்று வரும் உள்துறை உள்துறை அமைச்சர் அமித் ஷா அயோத்தி ராமர் கோவிலின் பூமி பூஜை அடிக்கல் நாட்டும் விழாவை பற்றி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில்: இன்று இந்தியாவுக்கு வரலாற்று மற்றும் பெருமைமிக்க நாள். பிரதமர் மோடி அவர்கள் ராமரின் பிறப்பிடத்தில் அடிக்கல் நாட்டி இருப்பது இந்திய கலாச்சாரம் மற்றும் நாகரிக வரலாற்றில் ஒரு பொன்னான அத்தியாயத்தை எழுதி ஒரு புதிய சகாப்தத்தை படைத்தது உள்ளது என பதிவிட்டுள்ளார்.