திமுக தரப்பிலிருந்து தேர்தலுக்கு முன் தமிழகத்திலுள்ள குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் ஒவ்வொரு மாதமும் தரப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. திமுக அரசு ஏற்பட்டு தற்போது 2 வருடங்களாகியும் இன்னும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை
தமிழகத்திலுள்ள குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் தொகை தருவது எப்போது என்பது குறித்து நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். குடும்ப தலைவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற திமுகவின் கொடுத்த வாக்குறுதி நிச்சயம் நிறைவேற்றப்படும். இத்திட்டம் தொடர்பாக கணக்கெடுக்கும் பணி 85 சதவீதம் முடிந்துவிட்டது. 2023 பட்ஜெட்டில் இந்த தொகை குறித்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.