குறைந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம்!

Filed under: தமிழகம் |

கோடை காலம் ஆரம்பித்து வெயிலின் தாக்கம் தமிழகத்தல் மிகவும் அதிகமாக இருக்கிறது. மேட்டூர் அணை தற்போது கொஞ்சம் கொஞ்சமாக நீர்மட்டம் குறைந்து 55 அடிக்கும் கீழே சென்றுள்ளது.அணையின் நீர்த்தேக்க பகுதியில் புராதன சின்னங்கள் வெளியே தரும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து நீர்த்தேக்கங்களிலும் மிக வேகமாக நீரின் அளவு குறைந்து வருவதாக கவலை தரும் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. இதனால் பெங்களூரில் ஏற்பட்ட தண்ணீர் கஷ்டம் தமிழகத்திற்கு ஏற்படுமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 55 அடிக்கும் கீழே குறைந்துள்ளது. இதன் காரணமாக அணையின் உள்ளே உள்ள புராதன சின்னங்கள் வெளியே தெரியும் அளவுக்கு உள்ளன. குறிப்பாக நாகமரை பரிசல் துறை பகுதியில் நந்தி சிலை மற்றும் கிறிஸ்தவ தேவாலய கோபுரம் ஆகியவை வெளியே தெரிகின்றன. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தான் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 55 அடிக்கும் குறைந்துள்ளதாகவும் அதுமட்டுமின்றி நீர்த்தேக்கப்பகுதி ஆங்காங்கே வெடித்த நிலையில் காணப்படுவதாக கூறப்படுகிறது.