குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் கிராம மக்கள் முடிவு!

Filed under: தமிழகம் |

நாளை முதல் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என 13 கிராம மக்கள் முடிவெடுத்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. இந்நிலையில் 13 கிராமங்களில் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 13 கிராம மக்கள் கடந்த 100 நாட்களுக்கு மேல் போராட்டம் நடத்தி வருகின்றனர். சமீபத்தில் தமிழக அரசு பரந்தூரில் விமான நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்துவதற்கான அரசாணையை வெளியிட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த 13 கிராம மக்கள் புதிய போராட்டத்தை அறிவித்துள்ளனர். விமான நிலைய திட்டத்தை திரும்பப் பெறும் வரை தங்களது குழந்தைகளை அரசு பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்று அறிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.