“கேப்டன் மில்லர்’’ அப்டேட்…!

Filed under: சினிமா |

“கேப்டன் மில்லர்” திரைப்படத்தில் நடிகர் தனுஷூடன் சிவராஜ்குமார், அதிதி பாலன், பிரியங்கா மோகன் மோகன் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்தை “ராக்கி” மற்றும் “சாணி காகிதம்” பட இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் ஷூட்டிங்கை முடித்த தனுஷ் அடுத்து தன்னுடைய 50வது படத்தில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார். இப்போது படத்தின் பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. “கேப்டன் மில்லர்” திரைப்படத்தின் டீசர் நாளை வெளியாகும் என படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. நாளை விஜய்யின் “லியோ” திரைப்படம் ரிலீஸாகவுள்ளது. “கேப்டன் மில்லர்” பட டீசர் வெளியாகவுள்ளது ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “கேப்டன் மில்லர்” திரைப்படத்தின் ரிலீஸ் உரிமையை லைகா கைப்பற்றியுள்ளது.