சூர்யாவுடன் சூரிக்கு முக்கியக் கதாபாத்திரம்?

Filed under: சினிமா |

சிறுத்தை சிவா இயக்கத்தில் “கங்குவா” திரைப்படத்தில் நடிகர் சூர்யா நடித்து முடித்துள்ளார். அடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் “புறநானூறு” படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தையும் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரிக்கிறது.

சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் “வாடிவாசல்” திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தில் சூர்யாவோடு இயக்குனர் அமீர் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் இடம்பெறும் வைத்தி என்ற ஒரு துணைக் கதாபாத்திரத்தில் சூரியை நடிக்க வைக்கலாம் என வெற்றிமாறன் ஆசைப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே ஆண்ட்ரியாவை ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவைக்க வெற்றிமாறன் ஆசைப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகின.