அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள “கேப்டன் மில்லர்” திரைப்படம் ஜனவரி 12ம் தேதி ரிலீசாகவுள்ளது.
இத்திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். படத்தின் பிரி ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று முன் தினம் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்தது. அப்போது மேடையில் தனுஷ் மறைந்த நடிகரும் அரசியல் வாதியுமான விஜயகாந்துக்கு அவர் படத்தின் பாடலான “ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு” பாடலை பாடி அஞ்சலி செலுத்தினார்.