தற்போது கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அம்மாநிலத்தில் உள்ள மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தின் தலைநகர் திருவனந்தபுரத்திலுள்ள 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. கேரளாவில் எர்ணாகுளம், இடுக்கி, கோட்டயம் ஆகிய மூன்று மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 5ம் தேதி வரை இம்மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே கேரளாவில் உள்ள பல பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் மூன்று மாவட்டங்களில் மட்டும் அதிக மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.