கேரளாவுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

Filed under: இந்தியா |

தென்மேற்கு பருவமழை கேரளாவில் தற்போது தீவிரம் அடைந்துள்ளது. அதனால் இங்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாகவும் 3 மாவட்டங்களில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே கடந்த சில நாட்களாக வட இந்திய மாநிலங்களில் கன மழை பெய்து வருகிறது. கேரளாவிலும் சில நாட்களாக கன மழை பெய்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கேரளாவின் கண்ணூர், கோழிக்கோடு, வயநாடு மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதேபோல் ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, பாலக்காடு, திரிச்சூர் மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்ச எச்சரிக்கும் விடப்பட்டுள்ளது. இதையடுத்து கண்ணூர், கோழிக்கோடு, வயநாடு ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களுக்கும் இன்று விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.