இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களில் அதிகமானோர் ஆண்கள் தான் – மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்!

Filed under: இந்தியா |

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களில் 64 சதவீதம் ஆண்கள் மற்றும் 36 சதவீதம் பெண்கள் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதைப் பற்றி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்: இந்தியாவில் கொரோனாவால் மூவாயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அதில் 64 சதவீதம் ஆண்களும் 36 சதவீதம் பெண்களும் உயிரிழந்துள்ளனர்.

மேலும் வயசு வித்தியாசத்தில், 15 வயதுக்கு உள்ளவர்கள் 0.5 சதவீதமும், 15 வயது முதல் 30 வயதுக்குள் உள்ளவர்கள் 2.5%, 30 வயது முதல் 45 வயதுக்குள் உள்ளவர்கள் 11.4 சதவீதமும், 45 முதல் 60 வயதுக்கு உள்ளவர்கள் 35.1 சதவீதமும், 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் 50.5 சதவீதமும் உயிரிழந்துள்ளனர் மற்றும் 73சதவீதம் பேர் வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே குணம் அடைபவர்க்ளின் வீதம் 40.32 சதவீதமாக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அதில் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.