கைதிகளுக்கு ரூ.25 லட்சம் வழங்கிய தயாரிப்பாளர்

Filed under: சினிமா,தமிழகம் |

விடுதலை செய்யப்பட்ட தமிழக அரசியல் கைதிகளுக்கு லைகா குழுமத்தின் நிறுவனரும் லைகா ஞானம் அறக்கட்டளையின் தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரன் ரூ.25 லட்சம் பணத்தை வழங்கியுள்ளார்

முன்னணி படத்தயாரிப்பு நிறுவனமான லைகாவின் நிறுவனர் மற்றும் தலைவர் சுபாஸ்கரன். இவர், “கத்தி,” “எந்திரன் -2,” “பொன்னியின் செல்வன்- 1, 2” ஆகிய பல முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்துள்ளார். லைகா குழுமத்தின் நிறுவனரும் லைகா ஞானம் அறக்கட்டளையின் தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரன் ரூ.25 லட்சம் பணத்தை விடுதலை செய்யப்பட்ட தமிழக அரசியல் கைதிகளுக்கு வழங்கியுள்ளார். சமீபத்தில் இலங்கை நாட்டின் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் லைகா நிறுவன துணைத்தலைவர் பிரேம் சிவசாமி மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கலந்து கொண்டார். பல ஆண்டுகளாக சிறைத்தண்டனை பெற்று விடுதலையானவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தலா ரூ.25 லட்சத்தை தன் தயார் ஞானாம்பிகையின் பெயரில் வழங்கி வருகிறார் லைகா சுபாஸ்கரன். இதுவரை ஞானம் அறக்கட்டளையின் சார்பில் ரூ. 6 கோடி வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.