கொரோனா வைரஸ் காரணத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதில் கஷ்டப்படும் ஏழை எளிய மக்கள் பல உதவிகளை செய்துள்ளார் லாரன்ஸ். இவர் இது வரை மூன்று கோடி அளவிற்கு நிவாரண நிதி கொடுத்துள்ளார்.
அதில் பிரதமர் நிவாரண நிதிக்கு 50 லட்சம் ரூபாய், முதல்வர் நிவாரண நிதிக்கு 50 லட்சம் ரூபாய், ஃபெப்சி யூனியனுக்கு ரூ.50 லட்சம், நடனக் கலைஞரின் சங்கத்துக்கு ரூ. 50 லட்சம், மாற்றுத்திறனாளிகளுக்கு ருபாய் 25 லட்சம் மற்றும் ஏழை மக்களுக்கு ரூ.75 லட்சமும் கொடுத்துள்ளார் என தெரிவித்தார்.
மேலும், கொரோனா சமயத்தில் சுத்தம் செய்யும் தூய்மைப்பணியாளர்களுக்கு அடுத்த படத்தின் சம்பளத்தில் ரூ.25 லட்சம் தருவதாக தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் ராகவா லாரன்ஸ் அடுத்து 5 ஸ்டார் கதிரேசன் படத்தில் நடிக்க உள்ளனர்.இதன் மூலம் 3,385 தூய்மைப்பணியாளர்களின் தூய்மை பணியாளர்களின் வங்கிக் கணக்குகளில் ரூபாய்.25,38750 செலுத்தி உள்ளார். இதனை லாரன்ஸ் அவரின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.