“கொட்டுக்காளி” ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Filed under: சினிமா |

 

இன்று மாலை நடிகர் சூரி நடித்த ’கொட்டுக்காளி’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி படம் ஆகஸ்ட் 23ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இயக்குனர் வினோத் ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னபென் நடிப்பில் உருவான “கொட்டுக்காளி” திரைப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தனது சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்திருந்தார். “விடுதலை 2” மற்றும் “கருடன்” ஆகிய இரண்டு வெற்றி படங்களை அடுத்து சூரி நடிக்கும் படம் என்பதால் இத்திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. இந்த படத்திற்கு தற்போது ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து புரமோஷன் பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்த படம் இரண்டு சர்வதேச விருது வழங்கும் விழாவில் திரையிடப்பட்டு மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதனால் இப்படம் “கருடன்” போலவே நல்ல வசூலையும் குவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.