கொரானா வந்தாலும் பரவாயில்லை ! மக்கள் நல்லாயிருக்கனும் யார் அந்த அமைச்சர்..?

Filed under: தமிழகம் |

திருச்சி, ஏப்ரல் 23

வால்மீகி

உலக முழுவதும் கொரானா பயம் மக்களை அச்சுறுத்தி கொண்டிருக்கும் வேளையில், தமிழகத்தில் மட்டும் அது தினம் தினம் பொதுமக்களை மரண பீதியில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறது. தமிழக முதல்வர் மக்களை கொரானா பிடியில் இருந்து மீட்க பல அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார். அதேபோல் சுகாதாரதுறை, உள்ளாட்சித்துறை, காவல்துறை போன்ற துறைகள் எல்லாம் முழு வீச்சில் இறங்கி சம்பந்தபட்ட துறை அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை கொரானாவை விரட்டி மக்களை மீட்கும் பணியில் இறங்கியுள்ளனர்.

  ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ க்கள் முதல் சில அமைச்சர்கள் வரை கொரானாவுக்கு பயந்து வாய் சொல் வீரர்களாகவும், அறிக்கை புலிகளாகவும் இருக்க, திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவும் சுற்றுலாதுறை அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன், கொரனா எனக்கு வந்தாலும் பராவாயில்லை என்னை தேர்ந்தெடுத்த மக்களை கொரானா அண்ட விடாமால் பாதுகாப்பதும், அவர்களின் அன்றாட தேவைகளை செய்து கொடுப்பது தான் என் முதல் பணி என்று சொல்லி விட்டு ஆரம்பம் முதலே வேட்டியை மடித்துக்கட்டி கொண்டு களத்தில் இறங்கி மக்கள் பணி ஆற்றி வருகிறார்.

   மாங்காய் விலை உச்சத்தில் இருக்க 500 கிலோ மாங்காயை வாங்கி, மினி டோர் வேன்களில் வைத்துக்கொண்டு ரோட்டில் போவோர் வருவோர் என அனைவருக்கும் தானே முன்னின்று வழங்கி அந்த பகுதி மக்களையே ஆச்சர்ய படுத்தினார். அதேபோல் தன்னை பார்க்க வரும் மக்களுக்கு 100 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை கொடுத்து அசத்தினார். கிழக்கு தொகுதி மட்டுமல்ல மேற்கு தொகுதி கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் அவர்களின் தேவை அறிந்து நிவாரண உதவிகள் செய்ததோடு, பண உதவிகளை கண்ணும் காதும் வைத்தார் போல் செய்து முடித்துள்ளார். கட்சி நிர்வாகிள் அனைவருக்கும் மாஸ்க் மற்றும் சானிடைசர் போன்றவற்றை வழங்கினார். பல ஆண்டுகளாக தான் உணவருந்தும் ஆதிகுடி ஹோட்டலுக்கு சென்று அங்கு பணி புரியும் பணியாளர்களுக்கு முக கவசம் வழங்கினார். அவ்வப்பொழுது இன்னோவா காரில் நகர் வலம் செல்வது போல் சென்று ரோட்டோரத்தில் பசிக்கு ஆங்காங்கே ஒதுங்கி இருக்கும் மக்களை அணுகி 100 ரூபாய் பணத்தை தன் உதவியாளர் மூலம் கொடுக்க சொல்லி ஏழை மக்களின் பசியை போக்கி வருகிறார். யாரவது கேட்டால் நானும் ஒரு காலத்தில் ஏழைதாங்க, அவர்களின் வழி எனக்கு தெரியும் என்பதால் தான் அதை உணர்ந்து உதவி செய்கிறேன். எனக்கு கொரானா வந்தாலும் பராவயில்லை மக்கள் நல்லாயிருக்கனும் என்கிறாராம்.

 திருச்சி மாநகராட்சியில் உள்ள அம்மா உணவகங்களுக்கு 300 மூட்டை அரிசிகளை இலவசமாக வழங்கி ஏழை மக்களுக்கு உணவு வழங்க சொல்லி திருச்சி மாவட்ட அரசியல்வாதிகளிலேயே முன்னுதாரணமாக் விளங்கினார்.

  மக்களை போல் தானே விலங்குகளும் என்று எண்ணி, திருச்சி மலைக்கோட்டை விநாயகர் கோவிலில் உள்ள யானைக்கு கூட சாதம், தர்பூசணி, கடலை மிட்டாய் என்று யானை தின்பதற்குண்டான பொருட்களை வாங்கி லட்சுமி யானைக்கு நேரடியாகவே சென்று உணவூட்டினார். திருச்சியின் முக்கிய பகுதிகளான, என்.எஸ்.பி ரோடு, பெரிய கடைவீதி, வெல்லமண்டி, வெங்காய மண்டி, மேலபுலிவார் ரோடு ஆகிய பகுதிகளில் எல்லாம் தானே முன்னின்று கிருமி நாசினியை சுகாதர பணியாளர்கள் மூலமாக தெளிக்க வைத்தார். ஒரு கட்டத்தில் தானே வேட்டியை வரிந்து கட்டிக்கொண்டு பணியாளர்களிடமிருந்து தெளிப்பானை வாங்கி தானே கிருமி நாசினியை தெளித்து மக்கள் உள்ளம் கவர்கிறார்.

  தினம் தோறும் அமைச்சர் திருச்சி மாநகரம் முழுவதும் நகர் வலம் வருவதை காணலாம். ஆனால் அவர் நகர் வலம் வந்தாலே பல பேருக்கு அன்று உதவிகள், நிவாரணங்கள் கிடைப்பது என்னவோ உண்மை. அதே போல் அமைச்சர் திருச்சி வந்து விட்டாலே அமைச்சரை காண பத்திரிக்கையாளர்கள் குவிந்து விடுவார்கள். இதை கிழக்கு தொகுதி அலுவலகத்தில் தினமும் பார்க்கலாம். நான் வளர்ந்ததற்கு காரணமே அவங்க தான் அவங்களுக்கு என்னால் ஆன உதவிகளை செய்கிறேன் என்கிறாராம்.

   ஆனால் இந்த கொரானாவில் எல்லோருக்கும் செய்யும் அமைச்சர் தன்னை வளர்த்த பத்திரிகையாளர்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை என்று கொதித்து போய் உள்ளனர். P.G. நாயுடு ஸ்வீட் காரங்க கூட பல பத்திரிக்கையாளர்களுக்கு பெரிய கிப்ட் பாக்ஸ் கொடுத்து அசத்தும் பொது ஒரு அமைச்சர் ஏன் செய்யலை என்பது தான் பல பத்திரிக்கையாளர்களின் ஆதங்கம்.

    செய்வீங்களா அமைச்சரே…?