கொரோனா சிகிச்சை… ஹோமியொபதி மருந்தை பரிந்துரைத்த தமிழக அரசு!
மத்திய ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரைத்துள்ள ஆர்செனிகம் ஆல்பம்30 சி என்ற மருந்தை தமிழக அரசு கொரோனா சிகிச்சையில் பயன்படுத்துவதாக அறிவித்துள்ளது.
கொரொனாவுக்காக தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலகம் முழுவதும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் சித்தா மற்றும் ஹோமியோபதி போன்ற மருத்துவ முறைகளிலும் ஆராய்ச்சி மேற்கொள்ளப் பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய ஆயுஷ் அமைச்சகம்ஆர்செனிகம் ஆல்பம் 30 சி என்ற ஹோமியோபதி மருந்தை பரிந்துரைத்தது.
இதை பஞ்சாப், கேரளா மற்றும் தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் மக்களுக்குப் பரிந்துரைத்துள்ளன. இதுகுறித்து தமிழ்நாட்டைச் சேர்ந்த ஹோமியோபதி மருத்துவர், ஜேசய்யா அன்டோ பூவேந்தன் வழக்குத் தொடுத்து தமிழக அரசும் இந்த மருந்தை தமிழக அரசும் பரிந்துரைக்க வேண்டுமென்று கூறியிருந்தார். இந்த வழக்கில் பதிலளித்த தமிழக அரசு, அரசாணை வெளியிடப்பட்டு கொரோனா சிகிச்சைக்காகப் பயன்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து ஹோமியோபதி மருந்து கடைகளிலும் இந்த மருந்து கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது.
ஆர்செனிகம் ஆல்பம் 30 சி மருந்தை சாப்பிடும் முறை:-
இந்த மருந்தை மூன்றுநாட்களுக்கு தினமும் ஒருமுறை சாப்பாட்டுக்கு முன்னதாக உட்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு மாதம் கழித்து மீண்டும் அதே போல உண்ணவேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.