தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்க தற்போது வாய்ப்பில்லை – அமைச்சர் செங்கோட்டையன்!

Filed under: தமிழகம் |

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்க தற்போது வாய்ப்பில்லை என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தற்போது ஆந்திர பிரதேசம், அசாம் உள்பட 7 மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது. இதை பற்றி அமைச்சர் செங்கோட்டையன் கேட்டபொழுது; தமிழ்நாட்டில் பள்ளிகள் தற்போது திறக்க வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார்.

இன்று ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையத்தில் கூட்டுறவு வேளாண்மை சங்கம் மற்றும் குருமந்தூர் கோஆப்ரேட்டிவ் மார்க்கெட்டிங் சொஸைட்டியில் நகரும் நியாய விலை கடைகளை திறந்து வைத்தார்.

பின்பு நிருபர்களிடம் பேசிய அமைச்சர்; தமிழ்நாட்டில் பள்ளிகள் தற்போது திறக்க வாய்ப்பில்லை என்றார். நீட் தேர்வில் தமிழக அரசின் புதிய பாடத்திலிருந்து 174 கேள்விகள் கேட்கப்பட்டது எனவும் நாடே வியர்க்கும் அளவில் புதிய பாடத்திட்டங்கள் இடம்பிடிதுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.