சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில் நடமாடும் கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நாளுக்கு நாள் தலைநகர் சென்னயில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இதனால் எப்படியாவது தொற்று வேகத்தை குறைக்க அரசு அதிகாரிகள் போராடி வருகின்றனர். இந்நிலையில் புதிதாக சுகாதாரத்துறை செயலாளராக பொறுப்பேற்றுள்ள ராதாகிருஷ்ணன் சென்னையில் 173 நடமாடும் மருத்துவமனைகள் மூலம் இன்று முதல் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
இதில் தொற்று அறிகுறி உள்ளவர்கள் சோதனை செய்துகொள்ளலாம் என்றும் அறிகுறி உள்ளவர்கள் வாகனங்களில் வைத்து மருத்துவமனை அழைத்து செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.