ஒரே நாளில் சென்னையில் 6 மருத்துவர்கள் உள்ளிட்ட 12 மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு – அச்சத்தில் மருத்துவர்கள்!

Filed under: சென்னை |

உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தமிழ்நாட்டிலும் வேகமாக பரவி வருகிறது. மேலும் தமிழ்நாட்டில் சென்னையில் தான் இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 890 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப் பட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று ஒரே நாளில் 6 மருத்துவர்கள் உள்ளிட்ட 12 மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது.