கோவை, மே 7
வே. மாரீஸ்வரன்
கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க கூடிய மாபெரும் சக்தியாக இருப்பவர்கள் விஸ்வகர்மா சமுதாயத்தைச் சார்ந்த பொற்கொல்லர்கள்.
இவர்களின் தொழில்நுட்ப கைவண்ணத்தில் எண்ணற்ற தங்கநகை டிசைன்களை உருவாக்குவதில் இவர்களுக்கு நிகர் இவர்களே என்பது ஊரறிந்த விஷயமாகும். கொரோனா வைரஸ் தொற்று நோயால் சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துக் கொண்டு வந்த நிலையில் தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் வேலையில்லாமல் வீட்டில் முடங்கிப் போயிருந்த பல ஆயிரக்கணக்கான விஸ்வகர்மா சமுதாயத்தைச் சேர்ந்த பொற்கொல்லர்கள் தங்களின் அன்றாட வாழ்வாதாரத்தை இழந்து மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தனர்.
அன்றாட வாழ்வாதாரத்தை இழந்து வறுமையில் வாடும் விஸ்வகர்மா சமுதாயத்தைச் சேர்ந்த நலிவடைந்த பொற்கொல்லர்களின் நிலைமை அறிந்து கோவை தங்கநகை தயாரிப்பாளர் சங்கமும் மற்றும் கோவை தங்க நகை வியாபாரிகளும் இணைந்து கடந்த 6 5 2020 அன்று கோவை தெற்கு தொகுதியில் உள்ள சுந்தரேஸ்வரர் திருமண மண்டபத்தில் நலிவடைந்த விஸ்வகர்மா சமுதாயத்தை சேர்ந்த பொற்கொல்லர் சுமார் 5000 பேருக்கு அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. நிவாரணம் வழங்கும் இந்நிகழ்ச்சியில் எஸ். ஆர். ஜுவல்லரி ரகுநாத், சபரி, எம். பி. பாண்டியன், ராஜ்மோகன், கேசவமூர்த்தி, மற்றும் முத்து வெங்கட்ராம் ஆகியோர் கலந்து கொண்டனர்.