புதுச்சேரி மாநில பள்ளிக்கல்வித்துறை கோடை விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் திறக்கப்படும் தேதி குறித்து அறிவிப்பை அறிவித்துள்ளது.
தமிழகம் போலவே புதுவையிலும் 10, 11, 12 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மற்றும் ஒன்று முதல் 9 வரையிலான மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு முடிந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு ஏப்ரல் 29 முதல் கோடை விடுமுறை என்ற அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 6-ம் தேதி திறக்கப்படும் என புதுச்சேரி மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இருப்பினும் வெயிலின் தாக்கத்தை பொருத்து பள்ளிகள் திறகும் தேதி மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது. தமிழக பள்ளிக்கல்வித்துறையும் விரைவில் பள்ளிகள் திறக்கும் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.