நடிகர் விக்ரம் நடிப்பில் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கிய “கோப்ரா” திரைப்படத்தின் தயாரிப்பாளர் படத்தின் நீளத்தை குறைக்க சொல்லி கேட்டுள்ளதாகவும், அதற்கு இயக்குனர் சம்மதிக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
“கோப்ரா” திரைப்படம் ஆகஸ்ட் 31ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் சென்சார் தகவல் மற்றும் ரன்னிங் டைம் தகவல்கள் வெளியாகி உள்ளன. ‘கோப்ரா’ படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் இப்படத்திற்கு யூஏ சான்றிதழ் அளித்துள்ளனர். மேலும் இத்திரைப்படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 55 நிமிடங்கள் என உள்ளன. கடந்த சில மாதங்களாக இவ்வளவு நீளமுள்ள படங்கள் ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. இதனால் கோப்ரா தயாரிப்பாளர் லலித் நீளத்தைக் குறைக்க சொல்லி இயக்குனர் அஜய் ஞானமுத்துவிடம் வலியுறுத்தியுள்ளார். ஆனால் இயக்குனர் அதற்கு சம்மதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.