கோப்ரா படத்தில் மனனன முழு நடிப்புத் திறமையைக் காட்டிய விக்ரம் – 20 கெட்டப்புகள்!

Filed under: சினிமா |

சியான் விக்ரம் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படம் கோப்ரா. இந்தப் படத்தை அஜய் ஞானமுத்து இயக்குகிறார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு உடனே படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி செட்டி நடித்துள்ளார். தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தி என மூன்று மொழிகளில் இந்த படம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் விக்ரம் 20 விதமான கெட்டப்புகளில் நடித்துள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

இந்த கெட்டப்புகள் அடுத்தடுத்து வெளியிட வெளியிடுவதற்கு படக்குழு முடிவு எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் நடித்துள்ளார்.