கோவை, ஜூன் 27
கோவை சி.எஸ்.ஐ. டயோசீசனில் அட்மினிஸ்ட்ரேட்டீவ் கமிட்டி செயலாளராக இருந்து வரும் கருணாகரன் என்பவர் வருகிற 28/ 6/ 2020/ அன்று ஓய்வு பெறுகிறார். இதை ஸ்மல் செய்த திருப்பூர் சி.எஸ்.ஐ. தூய பவுல் ஆலயத்தின் ஆயர் வில்சன்குமாரின் தலைமையிலான ஒரு சில அட்டகத்தி ஆயர்களுடன் இந்த பவர்ஃபுல் போஸ்ட்டை தக்கவைக்க வில்சன் திருமண்டலத்தில் பல உள்ளடி வேலை செய்து வருகிறாராம்.கோவை சி.எஸ்.ஐ. திருமண்டலத்தில் யாருக்கு.? அட்மினிஸ்ட்ரேட்டீவ் கமிட்டி செயலாளர் பதவி யாருக்கு கிடைக்கும் என்று திருமண்டலத்தில் நமக்கே உரித்தான பாணியில் விசாரணையில் இறங்கி நமக்கு தெரிந்த பல ஆயர்களிடம் விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
சி.எஸ்.ஐ திருமண்டலத்தில் அட்மினிஸ்ட்ரேட்டீவ் கமிட்டி செயலாளர் பதவி கௌரவமான பவர்ஃபுல் பதவியாக இருந்தாலும், இதில் மாதாந்திர சம்பளம் என்பது பூஜ்ஜியம் தான். ஆனால், அறுசுவை உணவு, உயர்தர பயணப்படி, டீசல், பெட்ரோல், என்று அனுமார் வாலை போன்று நீளமாக வவுச்சர் எழுதி பணத்தை திருமண்டலத்தில் பெற்றுக்கொள்ளலாம். இதுபோக டயோசீசன் நிர்வாகத்தில் தேவைப்பட்டால் மால்பிராக்டிஸ் செய்து கொள்ளலாம் என்று சில ஆயர்கள் இத்தகவலை நம்மிடத்தில் கூறுகிறார்கள்.
ஏற்கனவே கோவை சி.எஸ்.ஐ. டயோசீசனில் உள்ள பல பதவிகளுக்கு தேர்தல் நடத்த பல மாதங்களுக்கு முன்பு தேதி முடிவு செய்து கவுன்சில் தொடங்கும்போது சிலர் நீதிமன்றத்திற்குச் சென்று தடை உத்தரவு வாங்கி வந்தார்களாம். பின்பு கோர்ட் வழக்கு என்று மாதங்கள் கடந்த பிறகு எப்படியோ ஒருவழியாக திருமண்டலத்தில் தேர்தல் நடத்தலாம் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த போது கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாகவும், ஊரடங்கு உத்தரவு, 144 தடை உத்தரவு என்று இருந்ததால் திருமண்டலத்தில் தேர்தல் நடை பெறாமல் போய்விட்டது. ஆகையால் தேர்தல் நடைபெறும் வரை தற்காலிகமாக திருமண்டலத்தில் அட்மினிஸ்ட்ரேட்டீவ் கமிட்டி நியமனம் செய்யப்பட்டு அதற்கு கருணாகரன் என்பவர் செயலாளராக இருந்து வந்தார். வருகிற 28/ 6/ 2020/ அன்று அவர் ஓய்வு பெறுவதால் அவருக்கு பதிலாக வேறு ஒருவரை அட்மினிஸ்ட்ரேட்டீவ் கமிட்டி செயலாளராக தேர்வு செய்து திருமண்டலத்தின் பேராயர் திமோத்தி ரவிந்தர் மாடரேட்டர் என்று அழைக்கப்படும் தலைமை பேராயருக்கு பரிந்துரை செய்து அனுப்ப வேண்டும். பேராயரின் பரிந்துரைப்படி தலைமைப் பேராயர் பரிந்துரைக்கப்பட்டவரின் விண்ணப்பத்தை ஆய்வு செய்து அட்மினிஸ்ட்ரேட்டீவ் கமிட்டி செயலாளராக நியமனம் செய்வார். இதுதான் நடைமுறையும் கூட.
தற்போது கோவை சி.எஸ்.ஐ. திரு மண்டலத்தின் பேராயர் திமோத்தி ரவீந்தர் டேவிட் பர்னபாஸ் என்பவரை டயோசீசனின் அட்மினிஸ்ட்ரேட்டீவ் கமிட்டி செயலாளராக நியமனம் செய்ய மாடரேட்டர் என்று அழைக்கப்படும் தலைமை பேராயாருக்கு பரிந்துரை செய்ய உள்ளாராம். இதில் விசேஷம் என்னவென்றால் இந்த டேவிட் பர்னபாஸ் மனைவியும் திமோத்தி ரவீந்தர் நெருங்கிய உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. டேவிட் பர்னபாஸ் அட்மினிஸ்ட்ரேட்டீவ் கமிட்டி செயலாளராக வந்துவிட்டால் தனக்கு ஜால்ரா போடும் அட்டகத்தி ஆயர் கூட்டத்தை ஓரங்கட்டி விடுவார் என்று திருப்பூர் பவுல் சர்ச் அட்டகத்தி ஆயர் வில்சன்குமார் பயப்படுகிறாராம்.
அத்துடன் ஆயர் பிரின்ஸ் கால்வின் கூட்டாளிகள் மற்றும் மீசைக்காரரின் கைகள் திருமண்டலத்தில் ஓங்கி விடுமென்று கதறுகிறாராம். அதேநேரத்தில் திருப்பூர் சிஎஸ்ஐ சர்ச் நிர்வாகத்தில் எனக்கு நிர்வாகக் குழுவில் பதவி கொடுங்கள் இல்லாவிட்டால் கல்லறை கமிட்டியில் பதவி கொடுங்கள் என்று மண்ணின் மைந்தர் என்று கூறிக்கொண்டு அந்த 60 வயது நபர் தனக்கு அறிமுகமான செய்தியாளர்களிடம் வில்சன் குமாரின் ஊழல் விவகாரங்களை கூறிக்கொண்டு தனக்குத் தானே ஆறுதல் தேடிக் கொண்டு வருகிறாராம் ஏற்கனவே டேவிட் பர்ணபாஸ் டயோசீசனில் வைஸ் பிரசிடெண்ட் தேர்தலுக்கு நாமினேஷன் செய்து உள்ளார் ஆகையால் டேவிட் பர்ணபாஸ் என்பவரை பரிந்துரை செய்யக் கூடாது என்று திருப்பூர் பவுல் சர்ச் அட்டக்கத்தி ஆயரான வில்சன்குமார் தனது கூட்டாளிகளுடன் பேராயர் திமோத்தி ரவீந்தரிடம் அடிக்கடி அடம் பிடித்துக் ரவுசு பண்ணி வருகிறாராம் என்று ஈரோடு பகுதியில் பணிபுரியும் ஆயர் ஒருவர் நம்மிடத்தில் இத்தகவலை சொல்லி ஒப்பாரி வைக்கிறார்.
கோவை சி.எஸ்.ஐ. திருமண்டலத்தில் அட்டக்கத்தி ஆயர் வில்சன்குமாரால் என்னென்ன தில்லாலங்கடி வேலைகள் நடக்கப்போகுமோ.? என்று அஞ்சுகிறார்கள் ஜீசஸ் விசுவாசிகள். பிசாசுகளின் பிடியில் இருக்கும் அட்டகத்தி ஆயர் வில்சன் குமாரை ஜீசஸ் காப்பாற்ற வேண்டுமென்று நாமும் பிரார்த்தனை செய்வோம்.! ஆமென்