கோயம்புத்தூர் மற்றும் திருப்பூரில் இந்து முன்னணியினர் இந்து மதம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக ஆ.ராசாவை கண்டித்து கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எம்.பி ஆ.ராசா சமீபத்தில் இந்து மதம் குறித்தும் இந்துக்கள் குறித்தும் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அவரது பேச்சு பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. ஆ.ராசாவின் இந்த பேச்சு இந்து மதத்தை இழிவுப்படுத்தும் விதமாக உள்ளதாக இந்து மத அமைப்புகள் பல கண்டனம் தெரிவித்துள்ளன. ஆ.ராசா தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என அவை தெரிவித்த நிலையில் ஆ.ராசா அதற்கு மறுப்பு தெரிவித்து பேசியுள்ளார். இந்நிலையில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஆ.ராசாவை கண்டித்து கடையடைப்பு போராட்டத்திற்கு இந்து முன்னணி அழைப்பு விடுத்தது. இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெறும் நிலையில் கோவை அன்னனூர், திருப்பூர் மாவட்டத்தில் அவினாசி உட்பட சில பகுதிகளில் காலையிலிருந்து கடைகள் முழுவதுமாக மூடப்பட்டுள்ளன.