சுந்தர் சி இயக்கத்தில் ஜெயம் ரவி, ஆர்யா நடிப்பில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருந்த திரைப்படம் “சங்கமித்ரா.” 2017ம் ஆண்டு தயாரிக்க திட்டமிடப்பட்டு, 2018ம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்த படத்தில் நாயகிகளாக ஸ்ருதிஹாசன் மற்றும் ஹன்சிகா ஆகியோர் ஒப்பந்தமாகி இருந்தனர்.
ஆனால் பொருளாதார பிரச்சனையின் காரணமாக இப்படம் தொடங்கப்படவில்லை. இதையடுத்து இப்போது “பொன்னியின் செல்வன்” வெளியாகி ஹிட்டாகியுள்ளது. மீண்டும் இத்திரைப்படத்தை தொடங்க திட்டமிட்டுள்ளார் இயக்குனர் சுந்தர் சி. இப்போது “அரண்மனை 4” திரைப்படத்தை இயக்கி வருகிறார். அவர், இந்தாண்டு இறுதியில் “சங்கமித்ரா” திரைப்படம் தொடங்கப்படும் எனவும், படம் முடிய 2 ஆண்டுகள் ஆகும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் இத்திரைப்படமும் “பொன்னியின் செல்வன்” போல 2 பாகங்களாக ரிலீசாகும் என்று கூறியுள்ளார்.