சட்டப்பேரவை ஒத்திவைப்பு!

Filed under: அரசியல்,தமிழகம் |

கடந்த சில நாட்களாக நடைபெற்ற தமிழ்நாடு சட்டசபை கூட்டத் தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2023ம் ஆண்டின் தமிழ்நாடு சட்டசபை கூட்டம் கடந்த திங்கட்கிழமை ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இந்த உரை பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அதன் பிறகு அடுத்தடுத்த நாள்களில் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றது. இன்றுடன் சட்டமன்ற கூட்டத்தொடர் முடிவடைந்ததாகவும் சட்டசபை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது முதலமைச்சர் உரையாற்றினார்.