சதிஷ் படத்தின் டிஜிட்டர் உரிமை இத்தனை கோடியா?

Filed under: சினிமா |

“காஞ்ஜூரிங் கண்ணப்பன்” திரைப்படம் ஏஜிஎஸ் நிறுவனத்தின் 24வது திரைப்படம். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த “நாய் சேகர்” திரைப்படத்திலும் சதீஷ் நாயகனாக நடித்திருந்தார். இதையடுத்து தற்போது ஏஜிஎஸ் நிறுவனத்தின் 24வது திரைப்படத்திலும் சதீஷ் நடிக்கவுள்ளார்.

இப்படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடந்து முடிந்துள்ளது. ஆச்சர்யப்படதக்க வகையில் படத்தின் டிஜிட்டல் உரிமை நெட்பிளிக்ஸ் நிறுவனத்தால் 9 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சதீஷ் படத்துக்கு இவ்வளவு டிமாண்ட்டா என ஆச்சர்யப்படவேண்டாம். விஜய் நடிக்கும் தளபதி 68 படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பதால் அந்த படத்தைக் கைப்பற்றதான் நெட்பிளிக்ஸ் நிறுவனம் சதீஷ் திரைப்படத்தை பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளதாம்.