வடிவேலு படத்தின் சாட்டிலைட், டிஜிட்டல் உரிமை விற்பனை!

Filed under: சினிமா |

‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்க்ஷன் பணிகளும் நிறைவு பெற்று தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது.

படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமை விற்பனை குறித்த தகவலை லைக்கா நிறுவனம் தெரிவித்துள்ளது. ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி பெற்றுள்ளதாகவும், ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் பெற்றிருப்பதாகவும் லைகா நிறுவனம் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளது. வடிவேலு, ஷிவாங்கி, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், முனிஸ்காந்த், ஷிவானி நாராயணன், ஆர்ஜே விக்னேஷ், சஞ்சனா சிங், உள்பட பலர் நடிப்பில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது. லைகா தயாரிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான படத்தை சுராஜ் இயக்கியுள்ளார்.